இன்று திறக்கப்பட்ட நடிகை சமந்தா கோயில்..!!

பிரபல நடிகை சமந்தாவுக்காக கட்டப்பட்டுள்ள கோயில், இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ளது.
 
samantha

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவுக்கு, ஆந்திராவில் சந்தீப் என்கிற ரசிகர்கள் தனது வீட்டிலேயே ஒரு கோயிலை கட்டியுள்ளார். இன்று அவருடைய பிறந்தநாள் என்பதால், கோயிலை திறக்க முடிவு செய்திருந்தார்.

அதன்படி, அவருடைய வீட்டு முற்றத்தில் நடந்து வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கோயில் இன்று திறக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வேண்டி உருவாக்கப்பட்ட சமந்தாவின் சிலை, ஏற்கனவே சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் பிரத்யுக்‌ஷா என்கிற அமைப்பை துவங்கி நிர்வகித்து வருகிறார். அதன்மூலம் பல்வேறு சேவைகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அதை சிறப்பிக்கும் விதமாக கோயில் கட்டியுள்ளதாக சந்தீப் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் நடிகைகளுக்கு அவர்களுடைய ரசிகர்கள் கோயில் கட்டுவது முதல்முறை இல்லை. ஏற்கனவே குஷ்பு, நயன்தாரா, நமீதா, ஹன்சிகா உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web