அட்லீ இயக்கும் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாகும் சமந்தா..?

 
நயன்தாரா, ஷாரூக்கான் மற்றும் சமந்தா

பாலிவுட்டில் அட்லீ இயக்கி வரும் ஷாரூக்கான் படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டதாகவும், அவருடைய கதாபாத்திரத்தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் அட்லீ, பாலிவுட்டில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு லயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பாலிவுட் நடிகை சானியா மல்ஹோத்ரா கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை வழக்கில் கைதாகி தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். இதனால் அட்லீ இயக்கி வரும் படத்தின் பணிகள் தாமதமாகி வருகின்றன. இதன்காரணமாக நயன்தாரா அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக புனேவின் ஷாரூக்கான் மற்றும் நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகியுள்ளதாக வெளியாகும் ரசிகர்கள் கவனம் பெற்று வருகின்றன. அதேபோல நயன்தாரா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

From Around the web