தெலுங்கு ரியாலிட்டி ஷோவில் ஜூனியர் என்.டி.ஆருடன் களமிறங்கும் சமந்தா..!

 
ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா

தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ரியாலிட்டி நிகழ்ச்சியில் சமந்தா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’. பல்வேறு ரசிகர்களிடம் வரவேற்பு இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முக்கிய பிரபலம் ஒருவர் பங்கேற்கவுள்ளார்.

சமீபத்தில் நாக சைத்தன்யாவை விவகாரத்து செய்வதாக சமந்தா தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து அவர் என்ன செய்வார் என்கிற எதிர்பார்ப்பு பலரிடையே நிலவியுள்ளது.

இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வரும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்கிற நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு ஹைதராப்பாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் நடைபெறவுள்ளது.

நடிகை சமந்தா தற்போது தெலுங்கில் சகுந்தலம் மற்றும் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு தமிழில் அறிமுக இயக்குநர் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய கதையாக தயாராகவுள்ளது.

From Around the web