குழந்தைக்காக சினிமாவை விட்டு விலக இருந்தார் சமந்தா- பிரபலம் வெளியிட்ட தகவல்..!
இந்தாண்டு குழந்தை பெற்றுக்கொள்ள நடிகை சமந்தா முடிவு செய்திருந்ததாக தெலுங்கு சினிமாவின் பிரபலம் ஒருவர் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமா நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, அவரை விட்டு பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார். இது இந்திய சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக சைத்தன்யாவின் தாழ்வு மனப்பான்மை தான் இந்த பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் தன்னை விட மனைவி சமந்தா வெற்றியாளராக இருப்பது நாக சைத்தன்யாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் பிரியும் முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பிரிவு ஒரேநாளில் முடிவு செய்யப்பட்டதாகவும், விவகாரத்தை தொடர்ந்து நாக சைத்தன்யா குடும்பம் மூலம் கிடைக்கும் பணம் மற்றும் சொத்து எதுவும் வேண்டாம் என சமந்தா கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது சமந்தா மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட சகுந்தலம் பட ஷூட்டிங்கில் அவர் பங்கேற்கவுள்ளார். இதுதொடர்பாக சகுந்தலம் பட தயாரிப்பாளரிடம் பிரபல ஊடகம் நேர்காணல் செய்துள்ளது. அதில் சமந்தா - நாக சைத்தன்யாவின் விவகாரத்து பின்னணி குறித்து பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
சகுந்தலம் பட கதையை சொன்ன போது சமந்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியுமா என்று கேட்டார். ஏன் என்று நான் கேட்டதற்கு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுளதாக சமந்தா கூறினார்.
மேலும் இதுதான் கடைசிப் படம், அதை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பிறகு சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது என்று நீலிமா அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
 - cini express.jpg)