மகளின் திருமண முறிவு குறித்து மனம் திறந்த சமந்தாவின் தந்தை..!

 
சமந்தாவின் தந்தை

நடிகை சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இடையே ஏற்பட்டுள்ள விவகாரத்து குறித்து நடிகை சமந்தாவின் தந்தை முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது.

திருமணத்துக்கு பிறகு சமந்தா படங்களில் நடிப்பதை தொடர்ந்தார். கணவன் மனைவியாகவும் சேர்ந்து நடித்தனர். கடந்த சில மாதங்களாக இருவரும் எந்தவித பொதுவிழாக்களிலும் ஒன்றாக வரவில்லை. இதனால் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

ஹைதராபாத்தில் இருவரும் தனித்தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின. பல தெலுங்கு ஊடகங்கள் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் பிரிந்துவிட்டதாக கூறின. இந்நிலையில் இருவரும் ஒன்றாக சமூகவலைதளத்தில் தங்களுடைய பிரிவை உறுதி செய்தனர்.

இந்நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு மகளின் விவகாரத்து எதிர்பாராதது என்று தெரிவித்துள்ளார். எல்லாம் சில நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் விவகாரத்து உறுதியாகியுள்ளது. இதனால் மனம் கொஞ்சம் செயலற்றுப் போயுள்ளது என அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
 

From Around the web