சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி படுவைரல்..!

 
1

சினிமாவில் உச்ச நடிகையாக காணப்பட்ட சமந்தா, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவஸ்தைப்பட்டு வந்தார். இதனால் உடல்நிலை மெலிந்து பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமான நிலையில் காணப்பட்டார். ஆனாலும் அதிலிருந்து படிப்படியாக மீண்டுள்ளார்.

சமந்தா நடிப்பில் இறுதியாக வெளியான Citadel : Honey Bunny என்ற வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இது அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ரகசிய ஏஜெண்டாக இந்த படத்தில் சமந்தா நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் மோசமான காட்சிகளில் சமந்தா நடித்துள்ளதாகவும் இணையத்தில் பேசு பொருளானது.

இந்த நிலையில், நடிகை சமந்தா இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஸ்டோரி ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது 'ஐ லைக் யு பட் ஐ லைக் மீ மோர்'  என்ற டீசேர்ட் அணிந்து அதனைஸ்டோரியில் வைத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் சமந்தா யாருக்கோ மறைமுகமாக ஏதோ சொல்ல வருகின்றாரா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். ஆனாலும் சமந்தாவின் இந்த ஸ்டைலும் அழகாகத்தான் இருக்குது என கமெண்ட் பண்ணி உள்ளனர்.

From Around the web