. சமந்தா வெளியிட்ட பரபரப்பு பதிவு..! "யாருக்கும் நிரூபிக்கணும் அவசியம் இல்லை".
தமிழில் விஜய், சூர்யா ஆகிய முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார் நடிகை சமந்தா. இதனிடையே, மையோடிசிஸ் எனும் சரும நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர், தனது திரைப் பயணத்தை தொடங்கினார். இதனிடையே, அவ்வப்போது சமந்தா சில கிசுகிசுக்களிலும், சர்ச்சைகளிலும் மாட்டிக் கொள்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சமந்தாவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் துண்டு மட்டுமே அணிந்தவாறு மசாஜ் செய்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதேபோல், சமந்தா குளியல் தொட்டியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியானது. பின்னர், அது டெலிட் செய்யப்பட்டது. இதனிடையே, இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மேலும், சமந்தாவா இது, என்ன ஆச்சு சமந்தாவுக்கு என்று பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக, சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை" என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு வெளியான பதிவு சமந்தா ரசிகர்களை அமைதிபடுத்தியுள்ளது. இருப்பினும், சமந்தாவின் இந்த வைரல் புகைப்படம் வெளியாகி இணையத்தை ஆட்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.