எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஓடிடி-யில் வெளியானது சமந்தாவின் ‘தி ஃபேமிலி மேன்’..!

 
சமந்தாவின் தி ஃபேமிலி மேன்

நடிகை சமந்தா நடிப்பில் மிகவும் சர்ச்சையை உருவாக்கியுள்ள ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 சீரியல் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மனோஜ் பாஜ்பாய் மற்றும் ப்ரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தி ஃபேமிலி மேன் ‘ சீசன் 1 ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. வெளிநாடுகளிலும் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பு உருவானது.

அதை தொடர்ந்து இந்த சிரீஸின் இரண்டாவது சீசனுக்கான படப்பிடிப்பு துவங்கியது. தென்னிந்திய ரசிகர்களை குறிவைத்து தி ஃபேமிலி மேன் சீசன் 2-வில் நடிகை சமந்தாவை களமிறக்கியது தயாரிப்பு நிறுவனம். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே சீசன் 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் தி ஃபேமிலி மேன் சீசன் 2-வுக்கான டிரெய்லர் வெளியானது. அதில் இரண்டாவது சீசன் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் சமந்தா இந்த சீரியலில் போராளியாக நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2-க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சீரியல் விடுதலைப் புலிகளை தவறாக சித்தரிப்பதாக கூறி பலரும் குற்றஞ்சாட்டினர். இது மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில் ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 சீரியல் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்த வலை தொடரை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று ரிலீசாகி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

From Around the web