நேரடியாக டி.வி-யில் வெளியாகும் சமுத்திரக்கனி திரைப்படம்..!

 
வெள்ளை யானை திரைப்படம்

நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ள ‘வெள்ளை யானை’ திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடுவதற்கு தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. புதிய படங்கள் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

இதனால் பெரும்பாலான படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சிகளில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ஏலே படம் தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த வரிசையில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ள ‘வெள்ளை யானை’ படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web