சமுத்திரகனி ஓபன் டாக்..! “அப்பா” படத்திற்கு லஞ்சம் கொடுத்தேன்..!

 
1
தனது சினிமா பயணத்தை உதவி இயக்குனராக தொடங்கிய இயக்குனர் சமுத்திரகனி பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகன், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார். இவர் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் சமுத்திரகனி ‘அப்பா’ படத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, செல்போன் வைத்திருப்பவர்கள் படத்தை விமர்சனம் செய்யலாம் என்று ஆகிவிட்டது. நல்ல படங்கள் ஓடும். யார் விமர்சனம் செய்தாலும் அதன் தரம் குறையாது, விமர்சனம் செய்வது என்பது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். நல்ல விஷயத்தை கூறினால் மக்கள் அதை வரவேற்பார்கள்.

என்னுடைய ‘அப்பா’ திரைப்படத்திற்கு நான் லஞ்சம் கொடுத்தேன். அது மிகவும் வருத்தமான விஷயமாக இருந்தது. ‘அப்பா’ திரைப்படத்தை அரசு தான் எடுத்திருக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையில் நான் கஷ்டப்பட்டு, நானே தயாரித்த திரைப்படத்திற்கு வரி விலக்கு சான்றிதழ் வாங்கும் போது பணம் கொடுத்து தான் வாங்கினேன் என்று பேசினார்.

From Around the web