ரைட்டராக நடிக்கும் சமுத்திரகனி- முக்கிய பிரபலங்கள் பாராட்டு..!

 
ரைட்டராக நடிக்கும் சமுத்திரகனி- முக்கிய பிரபலங்கள் பாராட்டு..!

இயக்குநர் பா. ரஞ்சத்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ரைட்டர்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ஃபிராங்கிளின் ஜேக்கப் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கும் ’ரைட்டர்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி. காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றும் எளிய மனிதரை பற்றிய படமாக இது உருவாகிறது.

இந்த படத்தின் சமுத்திரகனியுடன் இனியா, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படம் தொடர்பாக பேசிய இயக்குநர் ஃபிராங்க்ளின், இதுவரை சமுத்திரகனி நடித்த படங்களில் இருந்து ‘ரைட்டர்’ படம் வேறுபட்டு இருக்கும். அவரது சினிமா பயணத்தில் இது முக்கியமான படமாகும் என்று கூறினார்.

சமூகவலைதளத்தில் ‘ரைட்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக்கை பதிவு செய்த இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித், ”மனித மனங்களின் தீராத அதிகார வேட்கைக்கு பலியாகும் எளிய மனிதர்களின் எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர்” என்று தெரிவித்துள்ளார்.

From Around the web