இங்க தப்பா இருந்தா தவறெனின் வீழும்...சரியா இருந்தா... - வெளியான சமுத்திரக்கனியின் ‘திரு.மாணிக்கம்’ டீசர்..!!

 
1

தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் என பல மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் தான் சமுத்திரக்கனி . இயக்குநராகவும் நடிகராகவும் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ள இவரது நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

 

அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே ‘திரு.மாணிக்கம்’ . ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி , பாரதிராஜா , நாசர், தம்பி ராமையா, இளவரசு என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தின் அடுத்த நகர்வுக்காக அனைவரும் காத்திருந்த வேளையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

பரபரப்பான காட்சிகளுடன் வெளியாகி உள்ள ‘திரு.மாணிக்கம்’ படத்தின் டீசர் இதோ..

From Around the web