தனியாக வாழ்ந்து வரும் சமுத்திரக்கனியின் தாய் – வைரலாகி வரும் போட்டோ…!
Mar 31, 2023, 07:05 IST
தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் ‘புரட்சி கலைஞர், நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில்‘ போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் ‘சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை, நீர்ப் பறவை, வேலையில்லா பட்டதாரி‘ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து தற்போது தெலுங்கில் பவான் கல்யாணை வைத்து இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ராஜபாளையத்தை சொந்த ஊராக கொண்ட சமுத்திரக்கனி அங்கு அவரது தாயார் தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது சமுத்திரக்கனி வாழ்ந்த வீடு மற்றும் அவரது அம்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.