அடுக்கு மொழி பேசி அர்ச்சனாவின் பாத்ரூம் வீடியோவை கலாய்த்த சனம்..!

 
சனம் ஷெட்டி

நடிகை அர்ச்சனாவின் பாத்ரூம் வீடியோவை பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், நடிகை சனம் ஷெட்டி கலாய்த்து கருத்து பதிவிட்டுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

காமெடி டைம் அர்ச்சனா மகளுடன் சேர்ந்து யூ-ட்யூப் சேனலில் குளியல் அறை மற்றும் கழிவறையை பராமரிப்பது தொடர்பாக ஒரு வீடியோ பதிவிட்டார். அதற்கு மிகப்பெரிய விமர்சனங்களை அவர் சந்தித்து வருகிறார்.

பல்வேறு யூ-ட்யூப் சேனல்கள் அவருடைய வீடியோவை வைத்து ட்ரோல் செய்து வைரல் செய்தன. இதனால் இந்த விவகாரம் நெட்டிசன்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ச்சனா வீடியோ பதிவிட்டு ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையிலும், இந்த விவகாரம் இன்னும் பல்வேறு வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை அர்ச்சனாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சனம் ஷெட்டி, இந்த வீடியோவை கலாய்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “ஆயிரம் பிரச்னைக்கு இருக்கு இந்த நாட்டுல- உங்க பாத்ரூம் பிரச்னையை வச்சுக்கோங்க மா உங்க வீட்டுல” என்று அடுக்கு மொழியில் தெரிவித்துள்ளார்.

நடிகை அர்ச்சனாவும் சனம் ஷெட்டியும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த வரை எலியும் பூனையுமாவே இருந்தனர். அது அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னும் தொடர்வது சனம் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தெரிய வருகிறது. எனினும், அர்ச்சனாவை கலாய்த்து சனம் பதிவிட்டுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

From Around the web