சனம் ஷெட்டிக்கு ஆபாச செய்தி அனுப்பியவர் கைது..!

 
சனம் ஷெட்டி

நடிகை சனம் ஷெட்டிக்கு சமூகவலைதளத்தில் ஆபாச தகவல்களை அனுப்பி தொல்லை தந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழில் அம்புலி படம் நடிகையாக அறிமுகமானவர் சனம் ஷெட்டி. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த அவர், தென்னிந்தியாவின் முன்னணி மாடலாகவும் உள்ளார். 

இந்நிலையில் இவருடைய வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஒரு நபர் தொடர்ந்து ஆபாச தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார். இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சனம் ஷெட்டி தரப்பில் சைபர் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறை திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து அந்த நபர் திருவான்மியூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web