கலாக்ஷேத்ரா விவகாரத்தில் மோதிக்கொண்ட அபிராமி, சனம் ஷெட்டி..!! 

கலாக்ஷேத்ரா விவகாரத்தில் நடிகை அபிராமி தெரிவித்த கருத்துக்கு, நடிகை சனம் ஷெட்டி கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார்.
 
sanam shetty

சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று ஆசிரியர்கள் மீது மாணவிகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதையடுத்து அங்கு நடன ஆசிரியர்களாக பணியாற்றும் ஹரிபத்மன் என்பவரை காவல்துறையினர் கடந்த 3ஆம் தேதியன்று கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை அபிராமி, கலாக்ஷேத்ரா நிறுவனம் 80 ஆண்டு பாரம்பரியம் கொண்டது. அதன் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒருசார்பாக பார்க்கக்கூடாது. இந்த விவாகரத்தில் பேராசிரியர்களின் கருத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அங்கு பயின்ற முன்னாள் மாணவி என்கிற முறையில், அங்கு தவறு நடந்திக்க வாய்ப்பில்லாமலும் இருந்திருக்கலாம் என்று கருத்து கூறினார்.

இதற்கு அபிராமி மீது பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். சில சமூகவலைதளங்களில் அவர் மீது பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் கலாக்ஷேத்ரா விவகாரத்தில் அபிராமி கூறிய கருத்துக்கு, சக நடிகையான சனம் ஷெட்டி கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் 80 ஆண்டுகளாக கலாக்ஷேத்ராவில் இருந்தீர்களா? அங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியருடைய செயலுக்கும் நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா? நீங்கள் ஏன் பேராசிரியர்களின் ஆதரவை நாடுகிறீர்கள்? விரைவில் உண்மை வெளியாகும் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

சனம் ஷெட்டியின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு கூறி வருகின்றனர். அதற்காக அவர்கள் கலாக்ஷேத்ரா பேராசிரியர்கள் மீது எந்தவிதமான புகாரும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கை மீது நம்பிக்கை உள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்காக பாதிக்கப்பட்ட மாணவிகள் மீதான கருத்தையும் உதறித் தள்ள முடியாது என்று சனம் ஷெட்டி ஆதரவாளர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

From Around the web