அம்மாவுக்கு நலுங்கு வைத்த மகள்- சாண்டி மாஸ்டர் பெருமிதம்..!

 
அம்மாவுக்கு நலுங்கு வைத்த மகள்- சாண்டி மாஸ்டர் பெருமிதம்..!

நடன இயக்குநர் மற்றும் நடிகருமான சாண்டி மாஸ்டரின் மனைவிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடன இயக்குநராக உள்ள சாண்டி மாஸ்டர், மாறுப்பட்ட நடன அசைவுகளால் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார். பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கெடுத்து இறுதிப் போட்டி வரை இருந்து ரன்னராக வெளியே வந்தார்.

 

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சாண்டியை காண அவருடைய மனைவி மற்றும் மகள் வந்த எபிசோட் பல பார்வையாளர்களின் ஃபேவரைட்டாக இன்றும் உள்ளது. வெறும் 6 மாத குழந்தையாக இருந்த லாலா பாப்பாவை போட்டியாளர்கள் பலரும் தூக்கிக் கொஞ்சி மகிழ்ச்சியாக இருந்தனர்.

தற்போது சாண்டியின் மனைவிக்கு மீண்டும் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு சமீபத்தில் எளிமையான முறையில் வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்போது அவருடைய மூத்த மகள் லாலா தாயாருக்கு நலுங்கு செய்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படம் இணையதளத்தில் பதிவிடப்பட்டு வைரலாகியுள்ளது. மேலும் தன்னுடைய மனைவிக்கு குறும்புத்தனத்துடன் சாண்டி நலுங்கு செய்யும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. 

From Around the web