பிரபல WWE வீரர் பெயரை மகனுக்கு சூட்டிய சாண்டி..!

 
மனைவியுடன் சாண்டி

பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சினிமா நடன இயக்குநர் சாண்டி தன்னுடைய மகனுக்கு பிரபல டபுள்.டபுள்.யூ வீரருடைய பெயரை சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநரான சாண்டி மற்றும் சில்வியா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சாண்டி சமூகவலைதளங்களில் அறிவித்ததை அடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்து கூறினர்.

குழந்தையின் புகைப்படத்தை வெளியிடுமாறு பலரும் சாண்டிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தன்னுடைய மகன் புகைப்படத்தை சமீபத்தில் சாண்டி போஸ்ட் செய்தார்.

அந்த பதிவில் தன்னுடைய மகனுக்கு ஷான் மைக்கேல் என்று பெயர் சூட்டியுள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பலரும் வாழ்த்து கூறினார்கள். மேலும் இது டபுள்யூ.டபுள்யூ.இ போட்டியில் பங்கெடுத்து அரும் பிரபல குத்துச்சண்டை வீரருடைய பெயராகும்.

சாண்டி மற்றும் சில்வியா தம்பதிக்கு ஏற்கனவே லாலா என்கிற பெண் குழந்தை உள்ளது. சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது லாலா மிகவும் பிரபலமானார். நிகழ்ச்சியில் மகள் லாலா வந்த போது சாண்டி அடைந்த மகிழ்ச்சி அனைவரையும் நெகிழச் செய்தது.

தமிழில் பல்வேறு படங்களுகு நடனம் அமைத்து வருகிறார் சாண்டி. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்துக்கு அவர் நடனம் அமைத்து வருகிறார். மேலும் சில படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார்.

From Around the web