நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸாகும் ’சாணிக் காயிதம்’..?

 
இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் ‘சாணிக் காயிதம்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக நடிக்கிறாக அறிமுகமாகவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதை அடுத்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ‘சாணிக் காயிதம்’ படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியிடப்படவுள்ளது. வரும் நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web