அமேசான் ப்ரைமில் வெளியாகும்  'சாணிக் காயிதம்'?

 
1
‘சாணிக் காயிதம்’ படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் பிப்ரவரி மாதம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘சாணிக் காயிதம்’ படம் 80-களில் நடப்பது போன்ற கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web