சீரியலில் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் சஞ்சீவ்..!

 
1

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் சஞ்சீவ். இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

தளபதி விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய கிழக்கு வாசல் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த ஒப்பந்தமாகி இருந்தார். பூஜையிலும் இவர் பங்கேற்ற நிலையில் திடீரென அவரை சீரியலில் இருந்து விலக்கினர்.

இப்படியான நிலையில் தற்போது அவர் வீரசிங்கமாக வானத்தைப்போல சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த சீரியலில் கேமியோ ரோலில் தான் இவர் நடிக்க உள்ளார். விரைவில் புதிய சீரியலில் ஹீரோவாகவும் பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் வானத்தைப்போல சீரியலில் நடிக்க உள்ள ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு பேக் டு சன் டிவி, உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களுடன் என பதிவு செய்துள்ளார். இவருடைய பதிவுக்கு ரசிகர்கள் லைக் போட்டு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

From Around the web