மாற்றுத்திறனாளி கமல்ஹாசன் கெட்-அப்பில் சந்தானம்..!

 
புது கெட்-அப்பில் சந்தானம்

அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிகர் கமலின் கெட்-அப்பில் சந்தானம் நடித்துள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழில் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வந்து, தற்போது ஹீரோவாக கால்பதித்துள்ளவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடிக்கும் பல படங்கள் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்து வருவது, பல முன்னணி நடிகர்களுக்குக் கூட பீதியை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் நடித்த மாற்றுத்திறனாளி கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதாகும். அந்த கதாபாத்திரத்தின் கெட்-அப்பில் சந்தானம் நடித்துள்ள புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.

நடிகர் சந்தானம் தற்போது இந்தியில் தயாராகி வரும் ‘சின்னு மன்னு’ என்கிற படத்தில் நடித்துள்ளார். அதில் தான் அவர் அபூர்வ சகோதரர்கள் கமலாக நடித்துள்ளார். இதன்மூலம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
 

From Around the web