சற்றுமுன் ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்ட் அப்..!

 
1

தனது கரியரின் உச்சத்தில் இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ர படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து ஹீரோவாகவே நடித்துவருகிறார் அவர்.

அந்தவகையில் அவர் நடித்த இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, டகால்டி, ஏ1 என வரிசையாக நடித்துவருகிறார். தன்னுடைய பலமான காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளையே தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த டிக்கிலோனா படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருந்தார் சந்தானம். அந்தவகையில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. ஆனால் அடுத்ததாக வெளியான கிக் படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சந்தானம் கொஞ்சம் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் கடைசியாக 80ஸ் பில்ட் அப் படம் வெளியானது. படத்தை கல்யாண் இயக்க சந்தானத்துடன் ராதிகா ப்ரீத்தி, ஆர்.சுந்தர்ராஜன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் 80ஸ் பில்ட் அப் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது.

From Around the web