மீண்டும் சீரியலுக்கு திரும்பிய சரண்யா- விபரம் உள்ளே..!

 
சரண்யா துராடி

விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான சரண்யா துராடி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய டிவி தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சரண்யா. ஆனால் இவர் நடித்து வந்த ஆயுத எழுத்து சீரியல் பாதியிலே நிறுத்தப்பட்டுவிட்டது.

சீரியலை பார்த்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தொடர்ந்து சமூகவலைதளங்களில் சரண்யா ஆக்டிவாக இருந்தார். மேலும் ரோஜா சீரியலில் தெலுங்கு பதிப்பில் அவர் கதாநாயகியாக நடித்து வந்தார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு சீரியலில் நடிக்கிறார். விஜய் தொலைக்காட்சிக்காக ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலுக்கான ப்ரோமோ ஷூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web