உயிரிழந்த சரத்பாபுவின் கடைசி ஆசை என்ன தெரியுமா..?? நிறைவேறாமல் போன பரிதாபம்..!!
 

அண்மையில் மறைந்த நடிகர் சரத்பாபுவின் கடைசி ஆசை குறித்த விவரங்கள் வெளியாகி, திரையுலகத்தினரை மேலும் சங்கடமடையச் செய்துள்ளன.
 
 
sarath babu

ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் சரத் பாபு எந்தவித பின்னணியுமில்லாமல் சினிமாவில் கால்பதித்தார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்கத் துவங்கிய அவர், பல்வேறு குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்தார். தமிழில் சலங்கை ஒலி, முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை போன்ற மெகா ஹிட் படங்களில் அவர் நடித்துள்ளார்.

மேலும் ஆனந்தம் உட்பட சில சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். தெலுங்கிலும் அவர் பெரியளவில் குணச்சித்திர நடிகராகவே இருந்தார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த சரத்பாபு உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

இந்நிலையில் சரத்பாபுவின் கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை குறித்து தெரியவந்துள்ளது. நடிகர் சரத்பாபுவின் தந்தை சொந்தமான ஆடம்பர உணவகம் வைத்திருந்துள்ளார். ஆனால் சரத்பாபுவுக்கு அதே தொழிலை ஏற்று நடத்த விருப்பமில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து காவல்துறையில் சேருவதற்கு முயற்சித்துள்ளார். 

அப்போது தான்  கிட்டப்பார்வை பிரச்சனை இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையில் சேரும் சரத்பாபுவின் கனவு கலைந்துபோனது. இதையடுத்து அவர் சினிமாக்குள் வந்து பெரிய நடிகராகிவிட்டார். 

From Around the web