நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் சரத்குமார், ராதிகா தம்பதி..!

 
1

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர்கள்‌, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாரா ஆகிய இருவருக்கும் பிறந்தவர் நடிகை வரலட்சுமி. இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தாய்லாந்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வரும் சரத்குமார் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து அவருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்தனர். அப்போது ரஜினியும், அவருடைய மனைவி லதாவும் திருமண அழைப்பிதழை பெற்றுக் கொண்டு கண்டிப்பாக திருமணத்திற்கு வருவதாக உறுதி கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது சரத்குமார், அவருடைய முதல் மனைவி சாரா, இரண்டாவது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி உட்பட குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர். ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களை மிகவும் அன்புடன் வரவேற்றதாகவும் திருமணத்திற்கு கண்டிப்பாக வருவதாக உறுதி அளித்து இருப்பதாகவும் நடிகை வரலட்சுமி தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரஜினிகாந்த் மற்றும் லதா இருவரையும் எனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.


 

From Around the web