‘போர் தொழில்’ டிரெய்லர் எப்படி இருக்கு ?

சரத் குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’ படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
 
por thozhil

அசோக் செல்வன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ படத்துக்கு பிறகு, அவருடைய நடிப்பில் வேறு எந்த படமும் வெளியாகாமல் இருந்தது. தற்போது சரத் குமாருடன் அவர் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’ படம் அடுத்து வெளிவரவுள்ளது.

சைக்கோலாஜிக்கல் கிரைம் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார், சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது.

போர் தொழில் படத்தின் டிரெய்லர் தற்போது சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இளம் பெண்களை கடத்தி கொடூரமாகக் கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனை தேடி காவல்துறையில் பணியாற்றும் அசோக் செல்வன், சரத்குமார் அலைகின்றனர். அவனை இருவரும் சேர்ந்து பிடித்தார்களா என்பது தான் படத்தின் கதைக்களம். வரும் ஜூன் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லருக்கு பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு குவிந்து வருகிறது. 


 

From Around the web