அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் ‘போர் தொழில்’..!!
 

அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 
 
 
por thozhil

வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் அசோக் செல்வன் நடிப்பில் புதியதாக உருவாகவுள்ள படம் ’போர் தொழில்’. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். சரத்குமார், நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அப்லாஸ் என்டர்டெயின்ட்மென்ட் என்கிற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு  ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார் மற்றும் கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கான முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், போலீஸ் ஸ்டேஷன் போன்ற இடத்தில் ஆவணங்கள் மேசை மீது உள்ளன. அதில் ஒருபுறம் சரத்குமார் கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். மறுபுறத்தில் அசோக் செல்வன் கையில் ஒரு புத்தகத்தை பிடித்தவாறு இருக்கிறார்.

இதை வைத்து பார்க்கும் போது இந்த படம் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வருவது நமக்கு தெரியவந்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web