விரைவில் உருவாகும் சூரியவம்சம் 2- சரத்குமார் வெளியிட்ட தகவல்..!!

தமிழில் வெளியாகி மெஹா ஹிட்டடித்த சூரியவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது குறித்து நடிகர் சரத்குமார் பேசியுள்ளது பலரையும் கவனமீர்த்துள்ளது.
 
sarath kumar

விக்ரமன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான படம் ‘சூரியவம்சம்’. தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. 

அதுவரை தமிழில் வில்லன் மற்றும் ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்ட சரத்குமார், இந்த படத்தின் வருகைக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக மாறினார். அதிகளவிலான பெண் ரசிகர்களையும் அவர் பெற்றார். 

சூரியவம்சம் படத்தை தொடர்ந்து தான் அவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ஹீரோவாகவும் மாறினார். அவருடைய திரைவாழ்க்கை மட்டுமில்லாமல் சரத்குமாரின் அரசியல் வாழ்க்கைக்கும் அச்சாரமிட்டது சூரியவம்சம் படம் தான் என்று சொன்னால் மிகையாகாது. 

இந்நிலையில் அவருடைய நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய சரத்குமார், தன்னுடைய சூரியவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர், சினிமாவில் 40 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். நான் நடிக்கும் படம் எந்த மொழியில் தயாரானாலும், அதே மொழியில் நானே டப்பிங் பேசுவேன். சுமார் 145 படங்களில் நடித்துவிட்ட எனக்கு, தற்போது 25 படங்கள் கைவசம் உள்ளன.

எனது 150-வது படமாக ஸ்மைல்மேன் தயாராகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சூரியவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தின் உருவாக்க ஆலோசனை நடைபெறுகிறது. அத்துடன் 1992-ம் ஆண்டு வெளியான ‘சூரியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் யோசனை உள்ளது என்று சரத்குமார் நிகழ்வில் பேசினார்.
 

From Around the web