ஆடிப்போன சரவணன்.. இனி மயிலின் வாழ்க்கையில் நிகழப்போவது என்ன ?

 
1

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் நாடகத்தில் அரசி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வேண்டும் என சொல்லி, தங்கமயிலை அழைத்து கொண்டு கிளம்புகிறான். அவளும் ரொம்ப சந்தோஷமாக அவனுடம் கிளம்பி போகிறாள். ஆனால் கடைசியில் நீ படிச்ச காலேஜுக்கு நம்ம போக போறோம். உன்னோட சர்டிபிகேட் எல்லாத்தையும் இன்னைக்கு போய் வாங்குறோம் என சொல்கிறான். இதனால் அதிர்ச்சி அடைகிறாள் தங்கமயில்.

இதனிடையில் அரசி தனியாக இருக்கும் போது அவளிடம் சுகன்யா பேச்சு கொடுக்கிறாள். இந்த கல்யாணத்துல உனக்கு நெஜமாவே விருப்பம் இருக்கா? வீட்டு பேச்சைக்கேட்டு எந்த முடிவும் எடுக்காத என சொல்கிறாள். அதற்கு அரசி, வீட்ல உள்ளவங்க பேச்சை கேட்கிறது தப்பில்லையே. இப்போதான் நான் தெளிவா இருக்கேன். இப்போ மறுபடியும் என்னை குழப்பாதீங்க என சொல்கிறாள். இதனால் சுகன்யா அதிர்ச்சி அடைகிறாள்.

அந்த நேரத்தில் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை போன் போட்டு பேசுகிறார். அதையும் நோட் பண்ணுகிறாள் சுகன்யா. இந்தப்பக்கம் தங்கமயில், இப்போ காலேஜுக்கு எதுக்கு மாமா? அரசி கல்யாணம் முடியட்டும். நானே அப்பாவை கூட்டிட்டு வந்து சர்டிபிகேட் வாங்கிகிறேன் என சொல்கிறாள். ஆனால் தங்கமயில் எவ்வளவு சொல்லியும் சரவணன் கேட்பதாக இல்லை.


கடைசியாக காலேஜுக்கும் வந்து விடுகின்றனர். அங்கும் தங்கமயில் உள்ள போக வேணாம் மாமா.என்னை பிடிக்காத ஸ்டாஃப் நெறைய பேர் இங்க இருக்காங்க. இப்போ போய் சர்டிபிகேட் கேட்டா, ஏதாவது சொல்லுவாங்க. நான் என் அப்பாக்கிட்ட கேட்டு வாங்குகிறேன் என சொல்கிறான். ஆனாலும் சரவணன் அதை கேட்காமல், தங்கமயிலை வலுக்கட்டாயமாக அழைத்து போகிறான்.

இதனால் தங்கமயில் ஒருக்கட்டத்தில் கடுப்பாகி நான் இந்த காலேஜ்ல படிக்கவே இல்லை மாமா என்கிறாள். சரவணன் புரியாமல் அப்போ எந்த காலேஜ்ல படிச்சன்னு சொல்லு. இன்னைக்கே அங்க போய் சர்டிபிகேட் வாங்கிடுவோம் என்கிறான். அதற்கு தங்கமயில் நான் வெறும் 12th தான் படிச்சு இருக்கேன் மாமா. நான் படிக்கவே இல்லை என்கிறாள். இதனைக்கேட்டு அதிர்ந்து போகும் சரவணன், நாங்க பொண்ணு பார்க்க வந்தப்ப உன் அம்மா, அப்பா எல்லாரும் நீ படிச்சு இருக்கன்னு தான சொன்னாங்க என கேட்கிறான்.

அதற்கு தங்கமயில், நெறைய பேர் பொண்ணு படிக்கலன்னு சொல்லிட்டு இருந்தாங்க. இதுனால கல்யாணம் தள்ளி போய்ட்டே இருந்தது. அதான் பொய் சொல்லி இந்த காலயத்தை நடத்தி வைச்சாங்க என்கிறாள். இதனைக்கேட்டு சரவணன் மனமுடைந்து போகிறான். அவளை அங்கயே விட்டவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.

தங்கமயில் தன்னிடம் என்னலாம் சொல்லி ஏமாத்தினாள் என்பதை எல்லாம் நினைத்து பார்த்து அழுகிறான். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web