விக்ரம் படத்தில் மாஸ்டர் பிரபலத்திற்கு பதிலாக சர்கார் பிரபலம் ஒப்பந்தம்..!

 
விக்ரம் படத்தில் மாஸ்டர் பிரபலத்திற்கு பதிலாக சர்கார் பிரபலம் ஒப்பந்தம்..!

கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் இருந்து முக்கிய பிரபலம் வெளியேறிய நிலையில், சர்கார் படத்தில் பணியாற்றிய கலைஞர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘விக்ரம்’. இதில் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு முடிந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பியதும், படத்திற்கான ஷூட்டிங்கை ஒரே ஷெட்யூலில் வைத்து முடிக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்தியம் சூரியன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் தான் மாஸ்டர் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர். ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார்.

அவருக்கு பதிலாக தற்போது சர்கார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது.

From Around the web