வைரலாகும் சசிகுமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள நா நா படத்தின் ட்ரெய்லர்..! 

 
1

விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் நிர்மல்குமார் இயக்கியுள்ள படம் தான் நா நா.இப்படத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாரதிராஜா, சித்ரா சுக்லா,ரேஷ்மா வெங்கடேஷ், பக்ஸ்,பிரதீப் ராவத்,எஸ்கே கனிஷ்க், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்…படத்துக்கு ஹர்ஷ வர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார்….

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது..

இங்க நல்லது கெட்டதுன்னு எதுவுமே இல்ல என்ற வசனத்துடன் ட்ரெய்லர் ஸ்டார்ட் ஆகிறது.சரத்குமார் போலீஸாக நடித்துள்ளார் இதன் மூலம் ஆடு – புலி ஆட்டமாக படம் இருக்கும் எனத் தெரிகிறது…இந்த உலகத்துல இரண்டு விதமான மனிதர்கள் தான்.

ஒன்னு வேட்டையாடறவன் இன்னொருவர் இரையாகுறவன் என்ற வசனம் மூலம் சசிகுமாரை சரத்குமார் பிடிக்கும் போராட்டமாக கதை இருக்கும் என சொல்லப்படுகிறது.

From Around the web