லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தில் சசிகுமார்... ஆனா...  

 
1

ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் காஸ்மெட்டிக் தொழில் என படு பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் அன்னபூரணி.

இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும் ஓரளவுக்கு டீசண்டாக ஓடியது . இதையடுத்து ஓடிடியில் ரிலீஸ் ஆன இப்படம் மிக பெரிய சர்ச்சையில் சிக்கி கடைசியில் ஓடிடி தளத்தில் இருந்தே நீக்கப்பட்டது.

பொதுவாக பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை அதிகம் தேர்தெடுத்து நடித்து வரும் நடிகை நயன்தாரா வெற்றி , தோல்வி , சம்பளம் என எதை பற்றியும் கவலைகொள்ளாமல் நல்ல கதை இருந்தால் போதும் என தெளிவாக படங்களை வடிக்கட்டி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா சசிகுமார் உடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .Women centric படமாக உருவாகும் இப்படத்தை சசிகுமார் நடிக்காமல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web