‘இயக்குநர்’ நாற்காலிக்கு திரும்பும் ‘சசிகுமார்’..!!

 
1

சசிகுமார் 13ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இயக்குநர் நாற்காலியில் அமர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனும் இணைந்து படத்தில் நடிக்கப்போவதாகவும், கிராமப்பின்னியை மைய்யப்படுத்திய வின்டேஜ் கால படம் தயாராக போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் மற்ற யார் யார் நடிக்க இருக்கின்றனர் எனபதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சினிமாதுறைக்கு ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் படத்தின் நாயகனான் ஜெய்யுடன் இணைந்து  முக்கிய வேடத்தில் நடித்தும் இருந்தார். அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன் பிறகு நடிகராக களமிறங்கி, நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் நன் கு பரிச்சயமானார். சமீபத்தில் கூட இவரது நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

From Around the web