ஒரேநாளில் வெளியாகும் சசிகுமாரின் 2 படங்கள்..!

 
சசிகுமார்

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளிவரவுள்ளது. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து முழுநேர நடிகராக மாறிவிட்டார் சசிகுமார். படங்கள் இயக்குவதில் தேர்ந்த அனுபவம் இருந்தாலும், தொடர்ந்து அவர் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

தற்போது அவரிடம் ராஜவம்சம், , பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. அதேபோல எம்.ஜி.ஆர்.மகன்,கொம்புவச்ச சிங்கம்டா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படம் நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேநாளில் மற்றொரு படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள ராஜவம்சம் படமும் நவம்பர் 26-ம் தேதி வெளிவருகிறது. சசிகுமார் நடித்துள்ள 2 படங்களும் ஒரேநாளில் வெளியாவது இதுவே முதல் முறை. 
 

From Around the web