சசிகுமாரின் அயோத்தி திரைப்படத்தை பாராட்டிய சூப்பர் ஸடார்..!!
நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா மற்றும் புகழ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் அயோத்தி. இத்திரைப்படம் மார்ச் 3, 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் அயோத்தி திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைபடக்குழுவை தனது ட்விட்டர் பக்கத்தில் பாரட்டியுள்ளார்.
அதில் நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படமாக அயோத்தி அமைந்துள்ளது. முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும் என்றும் தெரிவித்துள்ளார்.
அயோத்தி…
— Rajinikanth (@rajinikanth) April 11, 2023
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!#Ayothi