சசிகுமாரின் அடுத்த படமும் ஓ.டி.டி ரிலீஸ் தான்..!

 
எம்.ஜி.ஆர்மகன்

சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநராக இருந்து நடிகராக மாறிய சசிகுமார், அந்த துறையில் ஓரளவுக்கு நல்ல பெயரை எடுத்துவிட்டார். இவருடைய நடிப்பில் தற்போது எம்.ஜி.ஆர். மகன், ராஜ வம்ச, பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்கள் முடிவடைந்துள்ளன.

இதில் எம்.ஜி.ஆர் மகன் படம் எப்போதோ வெளிவர வேண்டியது. கொரோனா காலக்கட்டத்தால் அது முடியாமல் போனது. தற்போது வெளியிடுவதற்கு சாத்தியமில்லாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் எம்.ஜி.ஆர் மகன் தயாரிப்பாளர் இந்த படத்தை பிரபல ஓடிடி தளத்துக்கு விற்றுவிட்டார். விரைவில் படத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. ஓடிடி தளத்தின் விற்றுள்ளதன் மூலம் தயாரிப்பாளர் நல்ல லாபம் பார்த்துவிட்டதாகவும் தெரிகிறது.

பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அப்பா - மகன் உறவை குறித்து பேசும் படமாக தயாராகியுள்ளது. மிருணாளினி ரவி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பாடகர் ஆண்டன் தாசன் பட்த்துக்கு இசையமைத்துள்ளார்.
 

From Around the web