நடிகர் சங்கத்திற்கு சசிகுமார் வைத்த கோரிக்கை..!
Jan 6, 2024, 09:05 IST
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/c471489e1bec47bf95ca0da112357aad.jpg)
மறைந்த நடிகர் விஜயகாந்த் இல்லத்திற்கு இயக்குனர் சசிக்குமார் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அவரின் புகைப்படத்தை வணங்கி அஞ்சலி செலுத்தினார். மேலும், தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.பின்னர் பேசிய அவர், நடிகர் சங்க கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமையான விஜயகாந்தின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.”,