மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கத் துவங்கிய கோபி..!!

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு மீண்டும் நடிகர் சதீஷ் அந்த தொடரில் நடிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
sathish

தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ‘கோபி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். கடந்த சில நாட்களுக்கு அந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி சமூகவலைதளத்தில் கூறியிருந்தார்.

இது அந்த தொடரை பார்த்து வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. மேலும் சீரியல் தயாரிப்புக் குழுவும் சதீஷுக்கு மாற்றாக பப்லு என்கிர பிரித்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபி போகக்கூடாது என்று கூறி வந்தனர்.

அதேபோன்று அந்த சீரியலில் நடித்து வந்த சக நடிகர்களும், சதீஷ் விலகுவதற்கு விடமாட்டோம். நாங்கள் அவரை தொடர்ந்து சீரியலில் நடிக்கவைப்போம் என்று சமூகவலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தற்போது மீண்டும்  பாக்கியலட்சுமி சீரியலில் பங்கேற்றுள்ளார். அதற்கான புகைப்படத்தை அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனால் சீரியலில் இருந்து விலகும் முடிவை சதீஷ் மாற்றிக்கொண்டுவிட்டாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக, இணையத்தில் பரவும் செய்திகளை நம்ப வேண்டம், நானே விரைவில் அறிவிக்கிறேன் என சதீஷ், நேற்று காலை ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

From Around the web