நடிகர் அஜித் குமாரை வெகுவாக பாராட்டிய சத்யராஜ்..!

 
1

நடிகர் சத்யராஜ் சென்னையில் திராவிடம் குறித்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், "தம்பி அஜித் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனை கோபம் வருகிறது என்றால்.. அதற்கு காரணம் மதம் தான்.. ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம்.. எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது.. ஆனால் அந்த மதம் தான்.. தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகான பதிவினை வெளியிட்டிருந்தார் அஜித். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

 

ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ரொம்ப ஆபத்தானது. ஆரியம் வந்து திராவிடத்தை எதிர்க்கலாம்.. தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் இதை பற்றி.. அவரிடம் நான் பேசுவது எல்லாம் சரியா என்று கேட்டால்.. நீ பேசுவதை பார்த்து அவர்கள் கோபப்பட்டால்.. நீ பேசுவது சரி என்றார்.. ஆனால் அவர்கள் சந்தோஷப்பட்டால் நீ தப்பா பேசுகிறாய் என்று அர்த்தம் என்று தெளிவாக சொல்லிக்கொடுத்துவிட்டு போயிருக்கிறார்..

டெக்னாலஜி வளர்ந்து வரும் போது, நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம்.. மும்மொழிக் கொள்கை எதற்காக.. மாணவனுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியம்.. பள்ளிக்கு போய் வரவேண்டும். அதன்பிறகு விளையாட்டு, கொஞ்ச நேரம் டிவி பார்க்கணும்.. அப்படித்தானே வாழ்க்கையை நடத்த முடியும்.. ஏற்கனவே என்னை மாதிரி சரியாக படிக்காதவர்களுக்கு , இங்லீஸ், கணக்கு படிப்பதே பெரிய தலைவலியாக இருக்கிறது.. இதில் இந்தியையும் படிக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்..

திராவிடம் தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது.. இந்த வட மாநில தொழிலாளர்கள் நிறைய வருகிறார்கள்.. அவங்க மாநிலத்தில் வந்து ஜாதிய ஒடுக்குமுறையை அனுபவித்திருப்பார்கள்.. உயர்ஜாதி என்று கருதப்படுபவர்கள் யாரும் இங்கு வேலைக்கு வந்திருக்க மாட்டார்கள்.. மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் சகோதரர்களின் குடும்பங்கள் தான் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் கிட்டத்தட்ட 10, 15 வருடங்களாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களிடம் நாம் புரிய வைக்க வேண்டும்..

ஏன் உங்கள் மாதிரி எங்கள் மாநிலம் இல்லை.. திராவிட சித்தாந்தம் தான் காரணம் என்று புரிய வைக்க வேண்டும். நாம் சிங்கப்பூர் போய்விட்டு வந்தால், சிங்கப்பூரை போய் பாருங்க என்று சொல்வோம்.. அமெரிக்கா போய் வந்தால், அமெரிக்காவை போய் பாருங்க என்று கூறுவோம். அதுபோல் வடமாநில தொழிலாளர்கள், அவங்க மாநிலத்திற்கு போய் தமிழ்நாட்டை பாருங்க.. அப்படி சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும்.. அவர்களுக்கு இந்தியில் திராவிடம் குறித்து மொழி பெயர்த்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர் ஊரில் போய் தமிழ்நாடு பற்றி சொல்வார்.. இங்கு ஒரு மதக்கலரவமும் இல்லை.. நன்றாக போகிறது வாழ்க்கை என்று பெருமையாக கூறுவார்கள்.. எங்களை பிரியமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறுவார்கள். அங்கிருந்து இங்கு ஆட்கள் வருகிறார்கள் என்றால், நம்மாட்கள் அதைவிட மேலே சென்றுவிட்டார்கள் என்று அர்த்தம்.. நம்மாட்கள் வேலை செய்ய வரவில்லை என்று அர்த்தம் இல்லை" இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

From Around the web