’நாய் சேகர்’ டைட்டிலை உறுதி செய்த சதீஷ்- அப்போ வடிவேலு..?

 
வடிவேலு மற்றும் சதீஷ்

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்துக்கு ‘நாய் சேகர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், அந்த தலைப்பை நடிகர் சதீஷ் உறுதி செய்து போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்ட பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார் வடிவேலும். அவ்வாறு அவர் நடிக்கும் முதல் படத்தை சுராஜ் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘நாய் சேகர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டது.

முன்னதாக காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு அதுதான் டைட்டிலாக வைக்கப்பட்டது. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்து வருகிறார். நாய் சேகர் படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி டைட்டில் பெறப்படும் என வடிவேலும் அப்போது கூறி இருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி படத்துக்கு ”நாய் சேகர்’ என்கிற தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வடிவேலுவின் ரசிகனாக இந்த முதல் பார்வை போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று தனது பதிவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சதீஷ் படக்குழு நாய் சேகர் டைட்டிலை உறுதி செய்துள்ளதை அடுத்து, வடிவேலு - சுராஜ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ‘மீண்டும் நாய் சேகர்’ அல்லது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று தலைப்பு வைக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web