சிறுத்தை சிவாவின் கையை பிடித்து கண்கலங்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்..!

 
சிறுத்தை சிவா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

சென்னையில் நடந்த சிறப்புக் காட்சியில் அண்ணாத்த படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சிறுத்தை சிவாவின் கையை பிடித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் அழுதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்துக்கு சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றி அடையவில்லை. ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘2.0’ படமும் பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. இதனால் அடுத்த படம் பெரிய ஹிட்டாக வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்த ரஜினிகாந்த், ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தார். கொரோனா காலக்கட்டத்துக்கு இடையிலும் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு, தற்போது ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வரும் 4-ம் தேதி வெளிவரவுள்ளது. அதற்கு முன்னதாக சென்னையில் இந்த படத்துக்கான ‘சிறப்புக் காட்சி’ திரையிடப்பட்டது. இதில் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டு படம் பார்த்தனர்.

படத்தை முடித்துவிட்டு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநர் சிறுத்தை சிவாவின் கையை பிடித்துக் கொண்டு அழுதுள்ளார். அண்ணாத்த படம் ஒரு மேஜிக், மீண்டும் அப்பாவுடன் ஒரு படம் பண்ணுங்கள் என்று சவுர்ந்தர்யா தெரிவித்துள்ளார்.

From Around the web