பாலிவுட்டில் தயாராகும் சாவர்க்கர்  பயோபிக்...!
 

 
சாவர்க்கர்

இந்திய சுதந்திர போராட்ட வீரரான வினாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக தயாராகவுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவராக கருதப்படும் சாவர்க்கருக்கு இன்று 138-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு மகேஷ் மஞ்சரேகர் இயக்கவுள்ள ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தீப் சிங் மற்றும் அமித் பி. வாத்வானி என்கிறவர்கள் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்தீப் சிங் சாவர்க்கர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  ரிஷி வீர்மணி மற்றும் மகேஷ் மஞ்சரேகர் இணைந்து திரைக்கதை எழுதுகிறார்கள்.

இந்த படம் தொடர்பாக பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான சந்தீப் சிங்,  இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சாவர்க்கருக்கு முக்கிய பங்குள்ளது என்பதை இந்த படத்தில் காட்டவுள்ளோம். அவர் மீதான விமர்சனங்கள் நிறையவுள்ளது. அதற்கு பதிலளிக்கும் படமாக இது அமையும் என்று கூறினார்.

From Around the web