பிரசவத்துக்கு பிறகும் அப்படியே இருக்கும் சாயீஷா..!
 

 
நடிகர் ஆர்யா மற்றும் சாயீஷா

பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு நடிகை சாயீஷா தன்னுடைய தோற்றத்தை முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

தமிழில் வனமகன் படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சாயீஷா சைஹெல். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சுமித் சிஹெலின் மகளாவார். தொடர்ந்து ஜூங்கா, கஜினிகாந்த், கடைக்குட்டி சிங்கம், காப்பான் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு சக நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் கழிந்த நிலையில் சமீபத்தில் இருவரும் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர்னார்கள்.குழந்தை பிறந்த பிறகும் வெளியில் வராமல் இருந்த சாயீஷா, முதன்முறையாக தன்னுடைய படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், திருமணத்தின் போது எப்படி இருந்தாரோ, இப்போதும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் கமெண்டு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் அவருடைய பதிவுக்கு கீழ் பலரும் எப்போது ஆர்யா, சாயீஷா ஜோடி குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்வார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From Around the web