எஸ்.பி.பி கடைசியாக பாடிய ’அண்ணாத்த’ பட பாடல்- வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

 
ரஜினிகாந்த்

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவதற்கு முன்பு கடைசியாக ‘அண்ணாத்த’ படத்தில் அவர் பாடிய பாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி காலமானார். இவர் கடைசியாக அண்ணாத்த படத்துக்கான டி. இமான் இசையில் ஒரு பாடலை பாடி இருந்தார்.

அந்த பாடலை அவர் பாடிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு அண்ணாத்த படக்குழு எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தியது. மேலும்  'அண்ணாத்த' படத்திற்காக எனது இசையில் எஸ்.பி.பி பாடியது ஆசிர்வாதம்' என்று டி.இமான் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்னதாக ந்த பாடத்தின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. அதில் முதலாவதாக எஸ்.பி.பி பாடியுள்ள பாடல் அக்டோபர் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது படத்தில் ரஜினிக்கான ஓபனிங் பாடலாக இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web