என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி... நான் கனவில் கூட நினைக்கவில்லை - ரஜினி வேதனை

 
1

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

‘அண்ணாத்த’ படத்திலிருந்து மறைந்த எஸ்.பி.பி பாடிய முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘அண்ணாத்த அண்ணாத்த’ என்று தொடங்கும் இந்தப் பாடல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாடல் தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

“45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி 'அண்ணாத்த' படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


 

From Around the web