பயமுறுத்தும் த்ரில்லான 'நீலவெளிச்சம்' டிரெய்லர்..!!

 
1
malayalam neelavelicham movie trailer released

நீலவெளிச்சம் கதையை அடிப்படையாகக் கொண்ட மலையாளத்தின் முதல் திகில் படமான பார்கவிநிலையம் வெளியாகி 59 ஆண்டுகளுக்குப் பிறகு, நீலவெளிச்சம் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது.

வைக்கம் முகமது பஷீரின் திரைக்கதையில் ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகியுள்ள நீலவெளிச்சம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ஒட்டுமொத்த இந்திய திரை ஆர்வலர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஏப்ரல் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நீலவெளிச்சம் கதையை அடிப்படையாகக் கொண்ட மலையாளத்தின் முதல் திகில் படமான பார்கவிநிலையம் வெளியாகி 59 ஆண்டுகளுக்குப் பிறகு, நீலவெளிச்சம் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. ஆஷிக் அபு இயக்கும் இப்படத்தில் ரிமா கல்லிங்கல், டோவினோ தாமஸ், ரோஷன் மேத்யூ, ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1964ல் வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய நீலவெளிச்சம் கதையை அடிப்படையாகக் கொண்டு பார்கவீநிலையம் திரைப்படம் வெளியானது. படத்தை இயக்கியவர் ஏ.வின்சென்ட்.

புதியதாக ரீமேக் செய்யப்பட்டுள்ள நீலவெளிச்சம் படத்தை கணவர் ஆஷிக் அபுவுடன் சேர்ந்து ரீமா கல்லிங்கல் தயாரித்துள்ளார். படத்தின் கூடுதல் திரைக்கதையை ரிஷிகேஷ் பாஸ்கரன் எழுதியுள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. சாஜன் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். 

ஹரிஷ் தெகேபட் மற்றும் பிபின் ரவீந்திரன் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளார். டோவினோ தாமஸ், ரீமா கல்லிங்கல் உடன் செம்பன் வினோத் ஜோஸ், ஜேம்ஸ் எலியாஸ், ஜெயராஜ் கோழிக்கோடு, உமா கேபி, அபிராம் ராதாகிருஷ்ணன், ரஞ்சி கங்கோல், ஜித்தின் புத்தஞ்சேரி, நிஸ்தர் சேத், பிரமோத் வெளியநாடு, தஸ்னீம், பூஜா மோகன் ராஜ், தேவகி பாகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

From Around the web