தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு..!

 
சீமான் மற்றும் சமந்தா

தி ஃபேமிலி மேன் வலை தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நடிகை சமந்தா தனது சமூகவலைதள பக்கத்தில் அனைவரும் அமைதியாக இருக்கும் படி பதிவிட்டுள்ளார்.

இந்தியில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா ஆகியோருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 வலை தொடர் வரும் ஜூன் 4-ம் தேதி வெளிவரவுள்ளது. முன்னதாக இந்த சீரியலின் டிரெய்லர் வெளியானது.

ரசிகர்களிடையே இந்த டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும், பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த டிரெய்லருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் புதிய சர்ச்சையை உருவாகியுள்ளது. இந்த தொடர் வெளியிடப்படக்கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தி ஃபேமிலி மேன் வலை தொடர் வெளியிடப்படப்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’என்று எழுதப்பட்டுள்ள போஸ்டரை பதிவிட்டுள்ளார். மேலும், அந்த போஸ்டரில் மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ”முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்” என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

From Around the web