பாவ்னி ரெட்டிக்கு இரண்டாவது திருமணம்..? மூத்த சகோதிரி பதிவு...!

 
பவானி ரெட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்துள்ள பாவ்னி ரெட்டி குறித்து அவருடைய மூத்த சகோதிரி சிந்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து கவனமீர்த்த பாவ்னி ரெட்டி, பிக்பாஸ் சீச்ன் 5-யில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இவர் நிகழ்ச்சிக்குள் வந்ததில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள்  ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வருகின்றன.

பிக்பாஸ் வீட்டில் நடந்த கதை சொல்லுட்டுமா டாஸ்கில் பாவ்னி ரெட்டி தன்னை பற்றி கூறினார். அதில் திருமணமாகி கணவருடன் 8 மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்ததாகவும், அதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறினார்.

மேலும் அவருடைய தற்கொலைக்கு நான் தான் காரணம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் இப்போது கூட என்னுடைய மாமியார் மாமனாருடன் தான் நான் வசிக்கிறேன் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள் பாவ்னி ரெட்டியின் கணவர் மறைவுக்கு அவர் தான் காரணம் என்கிற வகையில் பல்வேறு தகவல்களை வெளியிட்டன. இதனால் அதிருப்தி அடைந்த சிந்து என்பவர் சமூகவலைதளத்தில் நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார்.

தன்னை பாவ்னி ரெட்டியின் மூத்த சகோதிரி என்று குறிப்பிட்டுள்ள அவர், பாவ்னியின் கணவர் பிரதாப்பின் மரணம் எதிர்பாராத ஒன்று. அவரை மறக்க முடியாமல் பாவ்னி மிகவும் சிரமப்பட்டார் என்று சிந்து குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமீபத்தில் வேறொரு நபருடன் பாவ்னிக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் சில பல காரணங்களால் அது திருமணத்தில் முடியாமல் போனது. கணவரிடன் மறைவுகு பிறகு பாவ்னி கண்ணியமாக வாழ்ந்து வருகிறார். அவரை பற்றி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என சிந்து கேட்டுக்கொண்டுள்ளார்.
 

From Around the web