மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவிக்கு இரண்டாவது திருமணம்..!

 
1

பிரபல நடிகை காஜல் பசுபதிக்கு திருமணம் நடைபெறவுள்ள தகவலை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, பிறகு சீரியல்களில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தவர் காஜல் பசுபதி. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ தான் இவர் நடித்த முதல் படம்.

அதை தொடர்ந்து ட்ரீம்ஸ், இதய திருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, சுப்பிரமணியபுரம், சிங்கம், கோ, மவுன குரு, அதிதி, இரும்பு குதிரை, அழகு குட்டி செல்லம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆயிரத்தில் இருவர், கலகலப்பு 2 என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் தன்னுடன் நடனமாடிய சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றாக சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். பிறகு இருவரும் விவகாரத்து பெற்றனர்.


இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி தனக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், திடீரென திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. அடுத்தவாரம் திருமணம் நடக்கிறது. கொரோனா பிரச்னையால் யாரையும் அழைக்க முடியவில்லை. யாரும் என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று அவர் பதிவிட்டுள்ளார். அதை தொடர்ந்து பலரும் நடிகை காஜலுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

From Around the web